Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக_வில் சலசலப்பு “மகனுக்கு பதவி” OPS மீது கடுப்பில் EPS அணி…..!!

தனது செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கியுள்ளார் என்று அதிமுக_விற்க்குள் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் ஏற்கனவே நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் வைத்தியலிங்கம் அதிமுக_வின் நிர்வாகியாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சார்பில் தேனி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்.மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.அமைய இருக்கும் மத்திய அமைச்சரவை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க விரும்புகிறது.

Edappadi Palanisamy Vaithiyalingam க்கான பட முடிவு

தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்று இருக்கின்ற ஒருவருக்கு அமைச்சர் அமைச்சராக பொறுப்பு வழங்க பாஜக தயாராக இருக்கின்றது.ஆனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் அணி ஒன்றாக இருந்தாலும் இரண்டு அணிகளாக தான் உள்ளே செயல்பட்டு வருகிறார்கள்.E.P.S ஐ பொருத்தவரை கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கின்ற வைத்திய லிங்கத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பாஜக தலைமையிடம் பேசியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ் தனது மகன் மட்டுமே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.மற்ற அனைவருமே தோல்வி அடைந்திருக்கிறார்கள் எனவே தனது மகனான ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி  வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palanisamy Vaithiyalingam க்கான பட முடிவு

ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை உங்களுக்கு ஒரு அமைச்சரவை தர தயாராக இருக்கிறோம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அதிமுக தலைமையிடம்  தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மத்திய அமைச்சர் தொடர்பாக  இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இறுதியில் OPS மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குங்கள் என்று கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கி கொடுத்ததால் அதிமுக OPS முணுமுணுத்து வருகின்றது.

Categories

Tech |