அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, பதவி வெறி பிடித்தவர் என்று சொல்வது, இந்த சட்ட திட்டமே தெரியாமல் பழனிசாமியை இருந்திருக்கார் என்பது தான் எனக்கு வருத்தம். ஏனென்றால் அதை விளக்க வேண்டும். பழனிசாமி கூப்பிட்டா நான் எங்கனாலும் வரேன்.
பழனிசாமி பழனிசாமி நீங்க எப்பநாளும் கூப்பிடுங்க. உங்களுக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு எனக்கு தெரியும் பர்சனலாவே..ஏன்னா உங்களுக்கும் புரியும். எங்க கூப்பிட்டாலும் வாரேன். இந்த பிரஸ் கூட்டத்தில் பழனிச்சாமி வந்தா, நான் நிக்க தயார். ரெண்டு பேரும் சட்ட ரீதியா விளையாடுவோம் வாங்க நீங்க. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு பதவி வெறி என்று…
யாருக்கு பதவி வெறி ? இப்பவே வெளியே போயிடுறேன் நானு.. அடுத்த நிமிஷம் ஓபிஎஸ் அண்ணன் என பேசல. நாங்க எல்லோருமே அதே முடிவு தான். அவரும் பேசமாட்டார், தவறா எங்கேயாவது ஒரு இடத்துல பேசி இருக்கிறாரா? ஓபிஎஸ் அண்ணன்.
PWD துறை உங்கள் கையில் இருக்கும், ஹைவேஸ் உங்க கையில இருக்கும், ஹோம் உங்க கையில தான் வச்சிருப்பீங்க. யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க. சீப் மினிஸ்டர் இல்ல, அவரு. பேசலாமா பதவி வெறியை பற்றி ? இது எந்த பதவி வெறி. ஆட்சியில் இருந்தாலும்,
அதிகாரத்தில் இருந்தாலும் பதவி வெறி. எளிய தொண்டன் கூட பெரிய நிலைமைக்கு வந்துரலாம். ஏதாவது ஒரு தொண்டன சொல்லுங்க சார். அண்ணனை வேணா நாங்க சொல்லி ஒதுங்கிக் கொள்ள சொல்றோம் என தெரிவித்தார்.