செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி, தலை வாரிசு என்று அழைக்கப்பட்ட திரு பாக்யராஜ் அவர்கள் வந்தார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கின்றார். மருத்துவமனையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது சென்று பார்த்தவர், அவரைத்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை வாரிசு என்றார். அவர் எங்களது கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அண்ணனுக்கு ஆதரவாக வந்திருக்கிறார்.
இதுபோன்று கலை உலகை சார்ந்தவர்கள் செஞ்சு ஏழுமலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மூன்றாவது கூட்டம்… அங்கு நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் கலந்து கொண்டதை பார்த்தோம். பத்திரிக்கையாளர்களின் மூலமாக சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன், எடப்பாடி பழனிச்சாமி ஒருவர் தனி மனிதராக்கப்படுவார், தனி மனிதராக நிற்கப் போகின்ற காட்சியை தமிழகம் காண தான் போகிறது.
இந்த சண்முகம் காணாமல் போய்விட்டார், இந்த வழக்குகளை போட்டதற்கு சி.வி சண்முகம் தான் காரணம், போயஸ் தோட்டம் போச்சு, இந்த கேஸ் போச்சு. நாடு போற்றும் நல்ல தீர்ப்பு வரும். சி.வி சண்முகம், ஜெயக்குமாரும் எங்கே இருக்கிறார்கள் என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மூளைக்கு முளை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனார்கள், அதுதான் உண்மை என தெரிவித்தார்.