அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திண்டுக்கல், சின்னாளப்பட்டிக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் வருகை தரலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கியது முதலே அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இன்னொரு பக்கம் சசிகலா, ஓபிஎஸ் இணையலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று மூவரும் ஒரே இடத்துக்கு வருவது தொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories