Categories
மாநில செய்திகள்

உங்கள் தானத்தால்….. “8 பேருக்கு வாழ்வளிக்கலாம்” தமிழக முதல்வர் வேண்டுகோள்…!!

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் மக்களிடையே முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். 

கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வர் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களிடையே சந்திப்பை ஏற்படுத்தி கொரோனா நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறுவார். அந்த வகையில்,

இன்று சந்தித்த செய்தியாளர்கள் சந்திப்பில், சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதில், உடல் உறுப்பு தானத்தின்  உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உறுப்பு தானம் செய்திட முன் வர வேண்டும். மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் எட்டு பேருக்கு வாழ்வளிக்க முடியும். இதனால் உடல் உறுப்பு தானம் வழங்க முன்வாருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |