ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை திட்டங்மா =னது அனைத்து குழந்தைகளுக்கும் எளிதாக கல்வி கிடைக்கக்கூடிய வகையில் இருப்பதால் அது பாராட்டுக்குரியது. அதன் பிறகு தொழில்நுட்ப கல்வியை ஆங்கிலத்தில் படிப்பதற்கு மாணவர்கள் சிரமப்படுவதால் தான் தேசிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் அவரவர் மாநில மொழியில் படிப்பதற்கான நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி தான் உதவும். இதனால்தான் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தாய்மொழியில் படிப்பதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுவதோடு, பகுப்பாய்வு திறன் மற்றும் ஆக்கப்பூர்வ சிந்தனையும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு காலத்தில் தொழில்நுட்பக் கல்விகள் தாய்மொழியில் கிடைக்காததால் பல்வேறு சிரமங்கள் இருந்தது. இந்த சிரமங்களை நீக்குவதில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். மேலும் இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் என்றார்.