Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சம வேலைக்கு சம ஊதியம்”… போராட்டத்தை தொடங்கிய இடைநிலை ஆசிரியர்கள்..!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்ற சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று முதல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அவர்களிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்கள்.

Categories

Tech |