கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் கோவை காவல் ஆணையரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, காவல்துறையினரிடமும் நாங்கள் சொல்லி இருக்கிறோம். இணையதளங்களில், பரப்புரைகளில் பதிவுகளில் இது போன்ற விஷயங்களை இஸ்லாமிய மதத்துடன் இந்த வன்முறையை மையப்படுத்தி பேசுபவர்கள் மீது நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதலில் நீங்கள் அவர்களை அழைத்துப் பேசுங்கள், தெரியாமல் செய்பவர்களும் இருப்பார்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.தெரிந்து செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுங்கள் என்பதையும் சொல்லி இருக்கிறோம்.
சிலிண்டர் விபத்தை பொறுத்தவரை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாங்களும் அதற்கு பின்புலமாக இருக்கின்ற குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதில் ஒரு சந்தேகம் எங்களுக்கு என்னவென்றால், NIA ஏற்கனவே 2019ல் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரணை செய்து, அவருடைய கண்காணிப்பு வளையத்தில் இருக்கக்கூடிய ஒரு நபர் இதுபோன்ற குற்ற செயல்கள் கடந்த இரண்டு மாதமாக பல உளவுத்துறைகள் அதிகாரிகள் வந்து…
ஏற்கனவே விசாரணைக்கு போனவர்களை அழைத்து… இது தொடர்ச்சியாக ஃபாலோவில் இருக்கிறார்கள். அது போன்று தொடர்ச்சியாக கண்காணிப்பு இருக்கக்கூடிய நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. NIA போன்ற உளவு அமைப்புகள் இதில் தோல்வியை தழுவி விட்டார்களா ? அவர்கள் கண்காணிக்கவில்லையா? இல்லை அவர்களுக்கு தெரிந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இதற்கு NIA அதிகாரிகள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
அவர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வன்முறை எந்த வழியில் வந்தாலும், அதை நிச்சயமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தெந்த விதத்தில் ஒத்துழைப்பு வேண்டுமோ, அவர்களுக்கு நாங்க ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.