Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!!

ஸ்ரீ ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்ரீ ராம மந்திரங்கள் பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீ ராமா என்ற சொல்லாலே நம்முடைய வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். நாம் ராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும் ராம் என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே, ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும் என்பது ஒரு குறிப்பிடதக்கது. இவ்வாறு மனிதர்களிடம் இருக்கும் மனித நேயத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் ராமா என்ற ஒற்றை பெயர் சொன்னால் நம் வாழ்வில் அனைத்து வித நன்மைகளையும், அருளையும் பெற முடியும்.

ராமரின் காயத்ரி மந்திரம்:

ராமநவமி அன்று இந்த ராமரின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும். மேலும் திருமணத்தடை இருப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் ஞானம் பெறலாம். ராம நாமத்தை சொல்லி ராமனிடம் நாம் சரணடைந்தால் நமக்கு மோட்சத்தை கொடுப்பார்.

ஓம் தசரதாய வித்மஹே

சீதாவல்லபாய தீமஹி

தன்னோ ராமஹ்  ப்ரசோதயாத்

ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய

வேதஸே ரகுநந்தாய நாதாய

சீதாய பதயே நமஹ

பொருள்: இந்த மந்திரம் ஸ்ரீ ராமரின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமரை புகழும் இந்த மந்திரம் மிகவும் மங்களகரமானது. தாய் சீதாதேவியின் கணவரான ராமனின் பெயர் மனதார  சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் மன அமைதியும் வாழ்வில் வளமும் சேரும்.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஸ்ரீ ராமரின் மந்திரங்களை ராமநவமி அன்று அல்லது பிற நாட்களில் கூட நீங்கள் சொல்லி ஸ்ரீராமரின் முழு அருளையும் பெறுங்கள்.

Categories

Tech |