Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – செய்ய வேண்டிய தானம் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!!

ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால்  ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..!

விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும்.

தானம்  செய்யும் முறை:

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் ஸ்ரீராமர் பிறந்தது கோடை காலத்தின் போது தான். மேலும் ராமர் பிறந்த போது அவரை பார்க்க வந்தவர்களுக்கு தசரத மன்னன் நீர்மோரும், பானகமும் கூடவே விசிறியும் கொடுத்து உபசரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆகையால் இந்த வழக்கத்தை இன்றும் நாம் கடைப்பிடிக்கிறோம். அதுமட்டுமில்லாமல் வடை, பருப்பு பாயாசம், சாதம் , நீர் மோர், பானகம் ஆகியவற்றை பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு தரவேண்டும்.  விரதம் இருக்கும் பொழுது ஸ்ரீ ராம ஜெயம்,  ராம ஜெயம், ஜெய் ராம் என்று 108 முறை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏனென்றால் ராம நாமம் எல்லையற்ற சக்தி தரக்கூடியது.

செய்யும் தானத்தின் பலன்கள்:

ராமநவமி அன்று லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

வியாதிகள் நீங்கும்.

பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.

தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

குடும்பம் நலம் பெருகி வறுமையும் பிணியும் அகலும்.

நாடிய பொருள் கைகூடும்.

 

Categories

Tech |