Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை: போலீசார் தீவிர விசாரணை…!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 10 நாட்களிலேயே மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வான்மதியின்  உறவினர்கள் இருவர் நம்பிராஜன் தரப்பினரால் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழி தீர்க்கும் வகையில் நம்பிராஜனின் தாயார் சண்முகத்தாய் அவரது சகோதரி சாந்தி ஆகியோரை 12 பேர் கொண்ட மர்ம கும்பல் தலை துண்டித்து படுகொலை செய்துள்ளது. முக கவசம் அணிந்த படி ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டுகளை வீசி இந்த கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் என்பவரின் மகன் நம்பிராஜன் இடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகலாம் என தெரிகிறது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் மற்றும் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் முன்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |