Categories
உலக செய்திகள்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலையா?…. 7 மாத குழந்தைக்கு போட்ட தவறான தடுப்பூசி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் முன்பே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத மத்தியில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இதுவரை அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள சியோங்னம் நகரில் 7 மாத குழந்தை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த குழந்தையின் தாய், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்துவதற்கு பதில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி விட்டார். அதன்பின் அந்த குழந்தையை பல நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்து கவனித்து வந்தனர். இதனிடையில் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதமே நடந்து இருந்தாலும், குழந்தையின் தாய் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் இழப்பீடு கேட்டு தற்போது வழக்கு தொடர்ந்த பின்னரே இது வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது.

Categories

Tech |