புதைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஆவார். இந்நிலையில் மோனிகா கடந்த 7ஆம் தேதி இறந்துள்ளார். மேலும் உறவினர்கள் மோனிஷாவை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து கலிராயன் கிராம அலுவலரான சதீஷ்குமார் இளம்பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அபிநயா உத்தரவின் பேரில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் முன்னிலையில் புதைக்கப்பட்ட மோனிஷாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மோனிஷாவின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.