இறந்த நிலையில் இராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் இறந்த ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கி உள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் இறந்த திமிங்கலத்தின் உடலை வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அந்த பரிசோதனையில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 6 மாத குட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொண்டி வன உயிரியல் காப்பகத்தில் ஆராய்சிக்காக ஒப்படைத்துள்ளனர்.மேலும் இறந்த திமிங்கலமானது கோகியா வகையை சேர்ந்த 200 கிலோ எடை கொண்டது என்பதை கண்டறிந்துள்ளனர்.