இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊடரங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நூலகங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நூலகத்தை திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி தமிழகம் முழுவதும் நூலகங்கள் அனைத்தும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தஞ்சாவூரில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் நூலகத்திற்கு வந்துள்ளனர். மேலும் நூலகத்தில் வாசகர்கள் சமூக இடைவெளியுடன் விரும்பிய புத்தகங்களை எடுத்து படித்தனர்.