தடுப்பூசி முகாமிற்கு ஒருவர் கூட வருகை தரவில்லை என்பதால் தேவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரத்தில் பீட்டர் அண்ட் பவுல் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவலாயத்தில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9 முதல் 11 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த தடுப்பூசி முகாமிற்கு ஒருவர் கூட வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் Priest Martin Stewen கூறியதில் “திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகளும் தவறாக முடிந்தது.
அதிலும் முதலாவதாக நடமாடும் தடுப்பூசி வாகனம் காலையில் உஸ்டர் பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் மாட்டிக்கொண்டது. இது தான் முதல் தடை. மேலும் இதனை தொடர்ந்து தடுப்பூசி பிரச்சாரம் தொடர்பாக எந்த ஒரு விளம்பர அறிக்கையும் தடுப்பூசி குழுவால் அறிவிக்கப்படவில்லை” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.