மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணம் பற்றி சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது “சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் நான் கேட்டபோது வேண்டாம் என்று அவர் மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் , சிகிச்சையின் போது தன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார்.
இறக்கும் அன்று மாலை வேளையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அனைத்து மருத்துவர்கள்,செவிலியர்கள் உடன் ஜெயலலிதா நன்றாக பேசுவார். டிச..,19ம் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என நினைத்திருந்தோம். இதற்கு முன்பாக டிச..,15 ஆம் தேதி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா கூறி இருந்தார்.
இதில் செவிலியர்களுக்கு கொடுக்க வளையல் உள்ளிட்டவற்றை ஜெயலலிதாவே தேர்வு செய்து வைத்து இருந்தார். டிசம்பர் 15ம் தேதி அவற்றை ஒப்படைக்கும்படி ஆர்டர் கொடுத்திருந்த நகைக்கடை நிறுவனத்திடமும் ஜெயலலிதா கூறி இருந்தார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் வந்தோ வழக்கறிஞர்கள் வாயிலாகவோ (அ) எழுத்து வடிவிலோ விளக்கம் தருமாறு கூறினர்.
அதன்பின் ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து வடிவிலும் உரிய பதிலை கொடுத்தேன். ஜெயலிலிதவின் மரணம் பற்றி மக்களுக்கு தெளிவாக தெரியவேண்டும் என நான் நினைத்தேன். ஜெயலலிதா இறந்த தேதி டிச.,5 தான். அந்த தேதியில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்ய எண்ணுபவர்கள்தான் அவர் இறந்த தேதி வேறு என சொல்லி வருகின்றனர்” என்று சசிகலா பேசினார்.