Categories
தேசிய செய்திகள்

அடடே…. இது அல்லவா அதிசயம்….. “இரட்டை சகோதரிகள்”…. ஒரே நாளில் எல்லாமே….!!!

இரட்டை சகோதரிகள் 2 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்று ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலயோல பரம்பு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர்-அம்பிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இதனால் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை நெருங்கிய நிலையில் மகள்களின் விருப்பப்படி மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. கடந்த 2020-ம் வருடம் டிசம்பர் 11-ம் தேதியன்று ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சகோதரிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அதன்பின் சகோதரிகள் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து ஸ்ரீபிரியா மதியம் வேளையில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே நாளில் மாலை வேளையில் ஸ்ரீலட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவ்வாறு இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |