பிரபல நடிகர் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது .
பிரபல நடிகரான ஹிப்ஹாப் ஆதி சினிமா வாழ்க்கையை தனது ஆல்பம் பாடல்கள் மூலம் தொடங்கினார். இன்று இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் ,பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிக்கின்ற படங்களுக்கும் ரசிகர்களிடையே பேராதரவு உள்ளது.
இந்நிலையில் அவரது அடுத்த படமான அன்பறிவு இடத்தில் காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாகவும் இயக்குனராக அஸ்வின் ராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதாகவும் இதில் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் செய்தி கிடைத்துள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களுக்குள் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப்படுகிறது. ஒளிப்பதிவு பணிக்காக மாதேஷ் மாணிக்கம் மற்றும் எடிட்டராக பிரதீப் ராகவ் ஒப்பந்தமாகியுள்ளார்.