Categories
சினிமா தமிழ் சினிமா

“இரவின் நிழல்” படத்தின்…. ஓடிடி வெளியீடு எப்போது தெரியுமா….? ஆர்வத்துடன் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தின்  ஓடிடி வெளியீடு. 

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் “இரவின் நிழல்”.  இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் இயக்கத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. இதேபோன்று “இரவின் நிழல்” திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக ஏ. ஆர். ரகுமானுடன், பார்த்திபன் கூட்டணி அமைத்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் பிரிஜிடா சாகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆனந்த கிருஷ்ண போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இரவின் நிழல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த நடிகர் பார்த்திபன் கூறியதாவது,  அமேசான் பிரைம் தளத்தில் “இரவின் நிழல்” திரைப்படம் இன்று அல்லது நாளை வெளியாகிவிடும். அதை நீங்கள் வரவேற்க தயாராக இருங்கள்,  அறிவிக்க நாங்கள் ஆவலுடன்  காத்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |