தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறது.
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தொற்று அதிகமாக கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் ராஜேஷ் பூஷன் கூறியபோது தொற்று இருபவர்களின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.