மகாராணியின் புகைப்படத்தை அரசியல்வாதி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஆயுத கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியைக் காண பிரெஞ்சு அரசியல்வாதியான Eric Zemmour சென்றுள்ளார். மேலும் அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது Erickயிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க, உடனே இவர் அவர்கள் பக்கம் திரும்பி துப்பாக்கியைக் காட்டி என்னை கேலி செய்கிறீர்களா? பின்னாடி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த சம்பவமானது சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆயுதத்தை ஒருவர் கையில் எடுக்கும் பொழுது இரண்டு விதிகளை குறிப்பாக பின்பற்ற வேண்டும். ஒன்று துப்பாக்கியில் தோட்டாக்கள் இருப்பதாகவே கருத வேண்டும். இரண்டாவது தான் அழிக்க நினைக்காத பொருளை நோக்கி குறி வைக்கக்கூடாது. ஆனால் இந்த இரண்டு விதிகளையும் அவர் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. மேலும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாறாக தேவையில்லாமல் பிரித்தானிய மகாராணியாரை இதில் இழுத்துள்ளார்.
அதாவது Eric தனது ட்விட்டர் பக்கத்தில் பிரித்தானியா மகாராணியார் துப்பாக்கி ஒன்றை ஆய்வு செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன்பு சர்ரேயிலுள்ள தேசிய துப்பாக்கி சூடு மையத்திற்கு சென்று இருக்கும் பொழுது எடுக்கப்பட்டதாகும். குறிப்பாக மகாராணியார் இவரை போன்று இல்லாமல் துப்பாக்கியை எவர் மீதும் குறிவைக்கவில்லை. மேலும் அவர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.