இந்தோனேசியாவிலுள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 40,000 அடி உயரத்திற்கு எழுந்த சாம்பலை கண்ட அப்பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் செமரு என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஆகையினால் 40,000 அடி உயரத்திற்கு செமரு ஏரி மலையிலிருந்து சாம்பல் எழுந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மலையடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பிலிருந்து 40,000 அடி உயரத்திற்கு எழுந்த சாம்பலின் காரணத்தால் volcanic ash advisory center பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.