Categories
உலக செய்திகள்

ஷாக் நியூஸ்…. “தொடர்ந்து 87 நாட்கள்”…. தீக்குழம்புகளை வெளியேற்றிய எரிமலை…. ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்….!!

ஸ்பெயினிலுள்ள எரிமலை ஒன்று தொடர்ந்து 87 நாட்கள் வெடித்து சிதறியதையடுத்து தற்போது சீற்றம் சற்று தணிந்துள்ளதால் அப்பகுதியில் சூழ்ந்துள்ள சாம்பல்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டில் லா பால்மா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் தம்பரே வினையெச்ச என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கி தொடர்ந்து 87 நாட்களாக வெடித்து சிதறியுள்ளது. அவ்வாறு வெடித்து சிதறிய இந்த எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளியேறியுள்ளது.

இந்த தீ குழம்புகள் அனைத்தும் கடலில் கலந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையை வெளிப்படுத்தியுள்ளது. ஆகையினால் ஸ்பெயின் அரசாங்கம் கடலோரத்திலிருக்கும் பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது தொடர்ந்து 87 நாட்களாக வெடித்து சிதறிய தம்பரே வினையெச்ச எரிமலையின் சீற்றம் சற்று தணிந்துள்ளது. இதனையடுத்து எரிமலை வெடித்து சிதறியதால் உருவான சாம்பல்களால் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.

Categories

Tech |