Categories
உலக செய்திகள்

சீற்றத்துடன் காணப்படும் எரிமலை…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. குவிக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினர்….!!

ஹவாய் தீவில் உள்ள எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஹவாய் தீவு கூட்டங்களில் அதிக அளவில் எரிமலைகள் காணப்படுகின்றன. அவை அடிக்கடி சீற்றமடைந்து தீ குழம்பை வெளியிடும். இந்த நிலையில் ஹவாயில் உள்ள ஷிலயா எரிமலை சீற்றம் அடைந்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் அதிலிருந்து கருநிற புகையுடன் எரிமலை குழம்பானது வெளியேறி உள்ளது. இந்த எரிமலை சீற்றத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீட்பு குழுவினர் தயார் நிலையில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த எரிமலை சீற்றமானது ஒரு மாதம் வரை தொடர்ந்து நீடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஷிலயா எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக 700 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. அதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |