பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர்.
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இன்று முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். அதன்படி அதற்கு பயிற்சி பெறுவதை காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே பெட்ரோல் ட்ரக்குகளின் பாகங்கள் என்ன..? அவற்றை எப்படி பயன்படுத்துவது…? என துல்லியமாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இன்று முதல் களம் இறங்கி எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோலை விநியோகிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் லண்டன் மற்றும் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் அதிகமாக எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பெட்ரோல் விநியோகம் செய்பவர்களின் கூட்டமைப்பு தலைவர் Brain Madderson கூறியபோது “நாட்டின் மத்தியப்பகுதி, வடக்குப்பகுதி மற்றும் ஸ்காட்லாந்தில் நிலைமை பரவாயில்லை. ஆனால் லண்டன் மற்றும் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் பயங்கரமாக இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.