இந்தியாவின் இலக்கான 450 ஜிகாவாட் அளவில் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான நோக்கத்தை அடையும் வகையில் கொடிய கொரோனா காலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதற்கிடையே கார்பனை அதிகளவில் பயன்படுத்தும் எரிசக்திகளுக்கு பதிலாக மாற்று எரிசக்திகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் மாறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் பிரதமரான மோடி தலைமையிலான அரசாங்கம் சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று எரி சக்திகளை பயன்படுத்தி 450 ஜிகாவாட் மாற்று எரிசக்தியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு தூதர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
அதாவது இந்தியா நிர்ணயம் செய்துள்ள 450 ஜிகாவாட் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான இலக்கை அடைய மிகவும் கொடிய கொரோனா காலகட்டத்திலும் கடினமான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறி பிரதமர் மோடியை அமெரிக்க காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு தூதர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பாராட்டியுள்ளார்.