Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எரிசாராயம் பதுக்கல் …. வசமாக சிக்கிக்கொண்ட 2 பேர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரையும்  குண்டர் சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 33) மற்றும் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் சிவபிரகாஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) இருவரும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் இவர்களுடைய குற்றச்செயலை கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட இருவரையும்  குண்டர் சட்டத்தில் கைது செய்ய  போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ்-க்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் மோகன்ராஜ் மற்றும் பாலமுருகன் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |