நாடியம்மன் கோவிலின் ஏரியை தூர்வார வேண்டி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் ஏரியானது மிகுந்த வறட்சி காரணமாக தாமரைக் கொடிகள் ஆகியவை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏரியானது விரைவில் தூர்வாரப்படும் என எதிர்பார்த்துள்ளனர். ஆனால் தக்க நடவடிக்கை எடுக்க யாரும் சரிவர முன்வரவில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஏரியை தூர்வாரி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.