Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோடு கொடுமணல் அகழாய்வில் ஈம சின்னங்கள் கண்டெடுப்பு..!!

ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பை உருக்க பயன்படுத்தக்கூடிய உலை, விலங்கின் மண்டை ஓடு ஆகியவை கிடைத்துள்ளது. பெருங்கற்கால கல்வட்டம், ஈம சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத் தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கொடுமணலில் ஏற்கனவே அளவீடு செய்து பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளன.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிக தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதேபோல் நகைகளுக்கு பொருத்தப் படும் வண்ண கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப்பட்ட ஆபரண கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வியாபாரிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின் போது ஈம சின்னங்கள் கிடைத்துள்ளன.

Categories

Tech |