Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மக்கள் கவனத்திற்கு….. காய்கறி அதிக விலைக்கு விற்றால்…. இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்க…!!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தி ஒன்றை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியே வரும் சமயங்களில் முககவசத்தை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், பழங்கள் உள்ளிட்டவையும், மருந்துப் பொருட்களையும் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக காய்கறிகளின் வரத்து நாளொன்றுக்கு தேவைக்கு அதிகமாகவே வந்து கொண்டிருப்பதாகவும், ஆகையால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மக்கள் உணரும் பட்சத்தில், 9677397600,  9585386997 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

Categories

Tech |