Categories
உலக செய்திகள்

இரு நாட்டு அமைச்சர்கள் தீடீர் சந்திப்பு …. வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை ….!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய பயணத்திற்கு முன்பாக  நேற்று ஈரானுக்கு சென்றுள்ளார் .

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அரசு முறைபயணமாக ரஷ்யா செல்கிறார் . ஆனால் அதற்கு முன்பாக அமைச்சர்  ஈரானுக்கு சென்றுள்ளார்.அவரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வரவேற்றார். அதன் பிறகு ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதிகாரிகளுடன் உரையாடினார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக  டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்  போது இரு நாடுகளுக்கு இடையேயான புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Categories

Tech |