ரயில் முன்பாய்ந்து என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் வடபுதுப்பட்டு பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கோகுல்நாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கோகுல்நாத் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கையில் அமர்த்திருந்தார். அங்கு கோகுல்நாத் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் ஏட்டு உஷாராணி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுல்நாத் சடலத்தை கைப்பற்றினர். எனவே ரயிலில் அடிபட்டதால் கோகுல்நாத் சடலம் சிதறி காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் கொட்டும் மழையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலத்தை கோணிப் பையில் சேகரித்து உறவினர்களுடன் பெண் போலீஸ் ஏட்டு உஷாராணி ரயில்வே தண்டவாளத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் மூலமாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.