சத்துமாவு என்று நினைத்து எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவண்ணநாதபுரம் பகுதியில் பட்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடலி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று கண் பார்வை குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் சுடலி அம்மாள் வீட்டில் இருந்த எறும்பு பொடியை சத்துமாவு என்று தவறாக நினைத்து தண்ணீரில் கலந்து குடித்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சுடலி அம்மாளை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுடலி அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.