தஞ்சையில் திரைப்பட பாணியில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் எஸ்பிஎன் மற்றும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை தொடர்பான குறும் செய்தி செல்போனுக்கு வந்து உள்ளது. குறிப்பாக ஒரு வாடிக்கையாளரின் அக்கவுண்டில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வீதம் அடுத்தடுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தஞ்சை நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதேபோன்று அதிராம்பட்டனத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்துள்ளனர். வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களின் புகாரை ஏற்க மறுத்துவிட்டதால், மேலிடத்தில் புகார் அளித்துள்ளனர் திரைப்பட பாணியில் அரங்கேறும் இந்த மோசடி தஞ்சை மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.