Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற போது …. பெண் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் வலைவீச்சு ….!!!

பெண் ஊழியரிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்த சித்ரா என்பவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தன் தோழியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் தன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரைப் பின்தொடர்ந்து  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சித்ரா ஓட்டி வந்த வாகனத்தை வழிமறித்து ,அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சித்ரா செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சப் – இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |