நிலத்தகராறில் விவசாயியை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் விவசாயி ரங்கநாதன் வசித்து வருகிறார். அதே பகுதியில் விவசாயி ஜெயவேல் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ரங்கநாதன், ஜெயவேல் ஆகிய இருவருக்கும் இடையில் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயவேல், ரங்கநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.