Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி தப்பியோட்டம்…… அட்ரஸ் மூலம் தேடுதல் வேட்டை….. தேனி அருகே பதற்றம்….!!

தேனி அருகே கொரோனா நோயாளி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் காட்டும் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளியின் முகவரியைக் கொண்டு காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நேற்று கொரோனா நோயாளிகள் இதேபோல் தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |