சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டனர். தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் இருந்த காவலர்கள் கைது நடவடிக்கை குறித்து அறிந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய காவலர் முருகனை நெல்லை வைத்து கைது செய்த காவல்துறையினர். சொந்த ஊரான விளாத்திகுளத்தில் பதுங்கி இருந்த காவலர் முத்துராஜ்ஜை , முருகன் முன்னரே காவல்துறையினர் பிடிக்கும் கொண்டுவரப்பட்டனர்.