இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது எஸ்பிஐ வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் அடிப்படையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்யேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத மாறுவதற்கான வசதியை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளது. இதனை YONO SBI, YONO LITE அல்லது Online SBI மூலம் உடனடியாக செய்து கொள்ளலாம். இந்த வசதியை உங்களது வங்கி கணக்குடன் இணைத்த மொபைல் எண் இருந்தால் மட்டுமே பெறமுடியும். தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் முறையில் வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் மாற்றம் செய்வது தொடர்பாக எளிய வழிமுறைகளை காணலாம். அதாவது,
ஆன்லைன் முறையில் கிளை மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்:
1. முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதனையடுத்து தோன்றும் எஸ்பிஐ முகப்பு திரையில் உங்களளுடைய User Id மற்றும் Password கொடுத்து Login செய்ய வேண்டும்.
3. அதன்பின் e-Service என்ற தேர்வை கிளிக் செய்து அதில் Transfer Sacings என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
4. நீங்கள் மாற்ற வேண்டிய கணக்கை தேர்வு செய்யவேண்டும். ஒரே ஒரு கணக்கு வைத்து இருந்தால் தானாகவே அது தேர்வாகி விடும்.
5. இதனை தொடர்ந்து உங்களது வங்கியின் கிளை எண்ணை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Terms And Conditions கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
6. உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிசெய்து கொண்டு Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
7. அதன்பின் உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP கொடுத்து Submit கொடுக்க வேண்டும்.
8. அதன்பின் Your branch transfer request has been successfully registered என்ற செய்தி உங்களது திரையில் தோன்றுவதை நீங்கள் காண முடியும்.