Categories
உலக செய்திகள்

பூமியில் செவ்வாய் கிரகமா…? வீரர்களின் புதிய முயற்சி…. தகவல் வெளியிட்ட விண்வெளி அமைப்பு….!!

இஸ்ரேலில் செவ்வாய் கிரகத்தினை போன்று சூழலை உருவாக்கி விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. அதன்பின் மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றது. இதன் காரணமாக இஸ்ரேலின் தெற்குப் பகுதி பாலைவனத்தில் உள்ள ராமோன் பள்ளத்தாக்கில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றது.

இந்த ஆராய்ச்சியை இஸ்ரேல் விண்வெளி மையம், ஆஸ்திரிய சங்கம், உள்ளூரில் உள்ள டி- மார்ஸ் என்ற அமைப்பு போன்றவை இணைந்து மேற்கொண்டு வருகின்றது. ஆகவே செவ்வாய் கிரகத்தைப் போன்றே சிவப்பு நிறத்தில் உள்ள இந்த பகுதியில் மலைபகுதியை குடைந்து ஆயிரத்து 300 சதுர அடியில் வீடு போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஆஸ்திரியா, இஸ்ரேல், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளை சேர்ந்த 5 விண்வெளி வீரர்களும், ஒரு வீராங்கனையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். இவர்கள் 3 வாரங்களுக்கு இங்கு தங்கி இருப்பார்கள்.

இதனைத்தொடர்ந்து கட்டிடத்திற்கு வெளியே அவர்கள் வரும்போது விண்வெளி உடை அணிந்து கொள்வார்கள். இதில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான சூழல் உள்ளிட்டவை குறித்து 25 நாடுகளைச் சேர்ந்த 200 ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இந்த ஆராய்ச்சியின்போது விண்வெளி வீரர், வீராங்கனைகளின் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். அதன்பின் மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு உதவும் என விண்வெளியின் அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |