Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருள் ” லிஸ்ட்ல இதையும் சேத்துட்டாங்க” … அரசு அதிரடி உத்தரவு..!!

பெல்ஜியம் அரசு அந்த நாட்டில் சாக்லேட்டும், பீரும் அத்தியாவசிய பொருளில் ஒன்றாக அறிவித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் உலகப் புகழ் பெற்றது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பெல்ஜியம் சாக்லெட் விற்பனை சற்று சரிவை கண்டது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாக்லேட்கள் மட்டும் ஊரடங்கு காலத்திலும் திறந்துவைக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்தியாவசிய பட்டியலில் சாக்லேட்டும் இணைந்ததாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்தே பிரான்சில் ஒயின் மற்றும் பீரைப் போல பெல்ஜியம் நாட்டில் மகிழ்ச்சியை குறிக்கும் பொருளாக அவர்கள் சாக்லேடை கருதுகிறார்கள். எனவே ஊரடங்கு காலத்திலும் சாக்லேட்கள் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஒன்றாக சாக்லேட்டும் இடம்பெற்றுள்ளது. இதற்கு சாக்லேட் உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சாக்லேட்டை போலவே பீர் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |