Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் காலை 6 – பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு!

புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். இதனையடுத்து புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் கடந்த வாரம் முதலே போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மக்கள் யாரும் வெளியே வர கூடாது என உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இனி காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மதியம் 2.30 வரை அத்தியாவசிய கடைகள் செயல்பட்ட நிலையில் மேலும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |