Categories
உலக செய்திகள்

லைவ் டெலிகாஸ்ட்டில்…. அரைநிர்வாணத்துடன் நடந்து சென்ற இளம் பெண்?… சர்ச்சையில் பத்திரிகையாளர்!

கொரோனா ஊரடங்கில் ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ நேர்காணலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ​​ஒரு அரை நிர்வாணப் பெண் சாதாரணமாக பின்னால் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தற்போது பெரும்பான்மையான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த சூழல் மிகவும் ஏதுவாக அமைந்தாலும் கூட, ஊடகம் மற்றும் காணொலி துறை சார்ந்த ஊழியர்களுக்கு சற்று சிரமமாக தான் இருக்கிறது..

ஆம், ஊடக துறையை சார்ந்தவர்கள் வீட்டில் இருந்து தங்களது வேலை பார்க்கும் போது, குறிப்பாக நிருபர்கள் வீட்டில் இருந்து லைவாக ஒளிபரப்பு செய்யும்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் பெற்றோர், உறவினர்கள், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இந்த வீடியோக்களில், அவருக்கு பின்னால் வந்து செல்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது போன்ற வீடியோக்கள் சிலருக்கு காமெடியாக அமைந்தாலும், அனைவருக்குமே அப்படி அமைந்து விடாது.

அதற்கு உதாரணமாக இதேப்போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது பிரபல ஸ்பானிஷ் பத்திரிகையாளருக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால், அவரது நேரலை வீடியோவில் இடம்பெற்ற அந்த சில நொடிகள் அவருக்கு ரொம்பவும் சங்கடமாக அமைந்துள்ளது.

அதாவது அல்போன்சோ மெர்லோஸ் என்பவர் ஸ்பெயினில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர் ஆவார் . இவர் சமீபத்தில்  ஒளிபரப்பிய ஒரு நேரலை வீடியோவில் அவருக்கு பின்னால் அரை நிர்வாணமாக ஒரு பெண் நடந்து செல்வது போன்று இடப்பெற்றது தற்போது பேசு பொருளாய் மாறியிருக்கிறது.

வீடியோ நேர்காணலின் போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ​​ஒரு அரை நிர்வாணப் பெண் சாதாரணமாக பின்னால் நடந்து செல்கிறார். இதில் வேடிக்கையானது என்னவென்றால், வீடியோவில் நடந்து சென்ற அந்தபெண் அவரது மனைவியோ அல்லது லவ்வரோ கிடையாது.

அப்படியென்றால் அவர் யார் என்று கேட்குறீர்களா? அவர் தான் ஸ்பானிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சோஷியல்’ பத்திரிகையின் நிருபர் அலெக்ஸியா ரிவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த விவகாரம் மெர்லோஸின் திருமண வாழ்வில் ஒரு பெரும் பிரலையத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

https://twitter.com/kr3at0r/status/1253644846751002624

Categories

Tech |