தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், அண்மையில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது செல்வராகவன் புது திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது 😎😎🤓🤓 pic.twitter.com/pZ7wQ67pIh
— selvaraghavan (@selvaraghavan) December 21, 2022