சீன விண்வெளி வீரர்கள் தங்களது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளனர் .
சீனா தனது புதிய விண்வெளி நிலையமான Tiangong எனும் விண்வெளி தளத்தை அமைக்க கடந்த ஜூன்16ம் தேதி 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது. இதில் புதியதாக கட்டப்பட்டு வரும் Tiangong என்ற விண்வெளி நிலையம் அதனுடைய சுற்றுவட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை விண்வெளி நிலையத்தில் இருந்த 2 வீரர்கள் தங்களுடைய முதல் விண்வெளி பணியை தொடங்கினர்.
இவர்கள் சுமார் 7 மணி நேரமாக விண்வெளியில் மிதந்தபடி விண்வெளி நிலையத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் பனோரமிக் கேமராவை பொருத்துவது, விண்வெளி நிலையத்தில் உள்ள ரோபோவை பரிசோதிப்பது ஆகிய பணிகளை முழுமையாக முடித்துள்ளனர். இந்நிலையில் இதில் பணிபுரிந்த இரு விண்வெளி வீரர்களான Liu Boming மற்றும் Tang Hongbo ஆகியோர் Tianhe core module-க்கு பாதுகாப்பாக வந்துள்ளனர் .இதுவே சீனாவின் முதல் விண்வெளி பயணத்தின் முழுமையான வெற்றி ஆகும் என அந்நாட்டு விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.