வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்படுத்திய பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி ஆய்வுசெய்துள்ளனர்.
அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடுஅதை பயன்படுத்திவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு பற்றிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.