Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை சொன்னது தப்பா… சுமைதூக்கும் கொக்கியால் தாக்கப்பட்ட கண்டக்டர்… 20 பேரின் கொடூர செயல்…!!

அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து  தனியார் பேருந்து  ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் இந்த பஸ் இப்போது உடனடியாக கும்பகோணத்திற்கு செல்லாது எனவும்  இதற்கு முன்னாடி வேறு ஒரு பேருந்து நிற்பதால்அதில் ஏறி கொள்ளுமாறு சங்கீதாவிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சங்கீதா பேருந்தை  விட்டு கீழே இறங்கி சென்றுவிட்டார்.

கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் இந்த பேருந்து ஜெயம்கொண்டான் வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மீண்டும் சங்கீதா ஏறி கீழ சிந்தாமணி கிராமத்திற்கு அன்பரசனிடம் பயண சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில் சங்கீதா இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது திடீரென்று சங்கீதாவின் அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் ஏறி கண்டக்டர் அன்பரசனை சுமைதூக்கும் கொக்கியால் வாயிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அன்பரசனை ஓட்டுநர் மற்றும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கண்டக்டர் அன்பரசன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் சாமிநாதன், மாரிமுத்து, வீரமணி, செல்வராஜ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |