Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை தூர்வாரனும்…. கவுன்சிலர்களின் கோரிக்கை…. ஒன்றியக்குழு தலைவரின் நடவடிக்கை….!!

கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சீனிவாசன் கூறியதாவது, தங்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாக இருப்பதனால் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பாளையம்பட்டி ஊராட்சியில் உள்ள 4 கண்மாய்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்தும், பாசி படர்ந்து பயன்பாடு இன்றி  கிடக்கின்றது.

எனவே அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் கோவிந்த சாமிநாதன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தலைவர் சசிகலா பொன்ராஜ் கூறியபோது, அதிகாரிகளை பார்வையிடச் செய்து கண்மாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போதிய அலுவலக உதவியாளர்கள் இல்லாததால் ஒரு சில பணிகளை நாங்கள் செய்யவேண்டியது இருக்கின்றது என்று கவுன்சிலர் வாழவந்தராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார் இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர்.

Categories

Tech |