Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இதை வெளியே சொல்லக்கூடாது” தொழிலாளியின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொன்னகுட்டஅள்ளி பகுதியில் தொழிலாளி பிரகாஷ் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் வருடம் பிரகாஷ் பள்ளிக்கு சென்று வந்த ஒரு சிறுமிக்கு மிரட்டல் விடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் சிறுமிக்கு, பிரகாஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி பிரகாஷ் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி காவல்துறையினர் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் பிரகாசுக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சையத் பக்ரத்துல்லா தீர்ப்பு கூறினார்.

Categories

Tech |